204 ரன்கள் இலக்கு – இலங்கையை வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா

south africa
Last Modified வெள்ளி, 28 ஜூன் 2019 (20:01 IST)
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியில் இலங்கை 203 ரன்களுக்கு ஆட்டமிழந்து 204 ரன்களை தென்னாப்பிரிக்காவுக்கு இலக்காக கொடுத்துள்ளது.

முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போதே இலங்கை உஷாராகி இருக்க வேண்டும். முதல் ஓவரின் முதல் பந்திலேயே இலங்கை கேப்டன் கருணரத்னே அவுட் ஆனார். அப்போதே தென்னாப்பிரிக்க வலுவான தயார் நிலையில் இருப்பது தெரிந்து விட்டது. பிறகு ஆடிய அனைத்து பேட்ஸ்மேன்களும் சுமாரான ஆட்டத்தையே கொடுத்தார்கள். தென்னாப்பிரிகாவின் அதிவேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இலங்கை 50 ஓவர்கள் முடிய 3 பந்துகள் மிச்சம் இருந்த நிலையில் மொத்த விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

இங்கிலாந்தை அசால்ட்டாக வென்ற இலங்கையிடமிருந்து ரசிகர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. தற்போது 204 ரன்களை இலக்காக கொண்டு தென்னாப்பிரிக்கா இறங்கியிருக்கிறது. இலங்கையிலும் மலிங்கா போன்ற பந்துவீச்சு சூரர்கள் இருக்கிறார்கள் என்பதால் 180 ரன்களுக்குள் தென்னாப்பிரிக்காவை சுருட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :