செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 20 டிசம்பர் 2017 (21:57 IST)

சரியும் விக்கெட்டுகள்: 181 என்ற இலக்கை அடையுமா இலங்கை??

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதுவரை இரு அணிகளுக்கிடையே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் நிறைவடைந்துள்ளது. டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. 

இன்ரைய முதல் டி20 போட்டி கட்டாக் நகரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி இலங்கைக்கு நல்ல இலக்கை நிர்ணயித்துள்ளது. இன்றைய போட்டியில் ரோகித் சர்மா 17 ரன்களில் ஆட்டமிழக்க, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ராகுல் ஜோடி நிதானமாக விளையாடியது. 24 ரன்களில் ஷ்ரேயாஸ் பெவிலியன் திரும்ப, தோனி களமிறங்கினார். ராகுல் மற்றும் தோனி அதிரடியாக விளையாடி  அணியில் ஸ்கோரை உயர்த்தினர். 61 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல் அவுட் ஆனார். இறுதி கட்டத்தில் மணிஷ் பாண்டே 2 சிக்சர்கள் அடிக்க இந்திய அணி 20 ஓவர்களில் 180 ரன்களை எட்டியது. 
 
இதனையடுத்து, 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது. இலங்கை அணி வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பி வருகின்றனர். அசுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருக்கின்றது. தற்போது, 11 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 53 பந்துகளில் 119 ரன்கள் குவிக்க வேண்டியுள்ளது.