1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (20:01 IST)

ரோகித் தலைமையில் தொடரை வென்ற இந்தியா

இந்தியா - இலங்கை அணிகள் இடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது.

 
இந்தியா - இலங்கை அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ர இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 44.5வது ஓவரில் 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
 
இதையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. ரோகித் சர்மா 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து களமிறங்கிய ஷியாஸ் ஐயர் களமிரங்கினார். தவான் ஜோடி சேர்ந்த ஷிரியாஸ் ஐயர் அதிரடியாக ஆடி 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதி வரை களத்தில் நின்ற தவான் சதம் விளாசினார்.