1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 26 ஜூலை 2018 (12:44 IST)

நார்வே பெண்கள் பலாத்கார விவகாரம்: இலங்கை வீரரிடம் போலீசார் விசாரணை

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருப்பவர் தனுஷ்கா குணதிலகா. சமீபத்தில் இவர் மீது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்ததோடு அவரது வருமானத்தில் 20 சதவீதம் அபராதமாகவும் விதித்தது. இங்கிலாந்து கிரிக்கெட் கிளப்பில் அடும் குணதிலகா நண்பர் ஒருவர் இலங்கை வந்திருந்தார். அவர் குணதிலகா தங்கி இருந்த ஹோட்டலுக்கு 2 நார்வே நாட்டு பெண்களை அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.


நார்வே பெண்களின் புகாரை அடுத்து குணதிலகா நண்பர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக குணதிலகாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், நார்வே பெண்களுடன் தனது  நண்பர் என்ன செய்தார் என்பது தெரியாது என்றும் கூறியுள்ளார்.