மனைவி மற்றும் காதலிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும்; இந்திய வீரர்களுக்கு புதிய கட்டுபாடு

Indian <a class=cricket team" class="imgCont" height="417" src="//media.webdunia.com/_media/ta/img/article/2018-07/24/full/1532435817-0977.jpg" style="border: 1px solid #DDD; margin-right: 0px; float: none; z-index: 0;" title="" width="740" />
Last Updated: செவ்வாய், 24 ஜூலை 2018 (18:07 IST)
முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடியும் வரை மனைவி மற்றும் காதலியிடமிருந்து ஒதுங்கி இருக்கும்படி இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் முடிவடைந்த நிலையில் வரும் ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடக்குகிறது. முதல் 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய அணி வீரர்கள் பலரும் ஒருநாள் தொடர் முடிந்த பின் அவர்களது குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் விடுமுறையை கழித்தனர். இங்கிலாந்து தொடரில் இந்திய அணி சரியாக செயல்படாததற்கு வீரர்களின் மனைவி மற்றும் காதலி உடனிருப்பது  காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.
 
இந்நிலையில் இந்திய அணி நிர்வாகம் வீரர்களுக்கு புதிய கட்டுபாடு ஒன்றை விதித்துள்ளது. இங்கிலாந்து எதிரான டெஸ்ட் போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடியும் வரை வீரர்கள் மனைவி மற்றும் காதலி ஆகியோரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :