நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: வெற்றி பெறும் நிலையில் இலங்கை!

Last Modified ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019 (07:30 IST)
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் தற்போது சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் கடந்த 14ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையே முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 286 ரன்கள் எடுத்ததால் இலங்கை அணி வெற்றி பெற 268 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 133 ரன்கள் எடுத்துள்ளது. இன்று இறுதி நாள் என்பதால் இன்று அந்த அணி மேலும் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உள்ளது. இன்னும் 10 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் 135 ரன்களை இலங்கை அணி எட்டிவிடும் என்பதால் இலங்கை அணிக்கு வெற்றி இலக்கு மிக அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே 71 ரன்களுடனும், திரமின்னே 57 ரன்களுடனும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்கோர் விபரம்:

நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ்: 249/10

டெய்லர்: 86
நிகோலஸ்: 42

இலங்கை முதல் இன்னிங்ஸ்: 267/10

டிக்வெல்லா: 61
மெண்டிஸ்: 53

நியூசிலாந்து 2வது இன்னிங்ஸ்: 285/10

வாட்லிங்: 77
லாதம்: 45

இலங்கை 2வது இன்னிங்ஸ்: 133/0

கருணரத்னே: 71
திரமின்னே: 57


இதில் மேலும் படிக்கவும் :