1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (22:50 IST)

இலங்கை அதிபர் வேட்பாளர் அறிவிப்பு! என்ன ஆச்சு ராஜபக்சே?

இலங்கை அதிபர் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் இலங்கை பொது ஜன பெரமுன கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபயா போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கடந்த முறை இக்கட்சியின் சார்பில் மகிந்தா ராஜபக்சே போட்டியிட்ட நிலையில் இந்த முறை அவருடைய சகோதரர் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று கொழும்புவில் நடைபெற்ற இந்த கட்சியின் தேசிய மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இக்கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் கோத்தபயாவிற்கு ஆதரவாக மஹிந்த ராஜபக்சே விரைவில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இலங்கை அதிபர் தேர்தலில் ஒரு வேட்பாளர் இரண்டு முறை மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். அந்த வகையில் ஏற்கனவே இரண்டு முறை மகிந்தா ராஜபக்சா போட்டியிட்டுவிட்டதால் அவர் மீண்டும் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தன் சகோதரர் கோத்தபாய அவர்களை போட்டியாளராக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடப்பட்டது 
 
இலங்கையில் விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே இறுதிப் போர் நடந்த போது இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர் கோத்தபயா என்பதும் அவருடைய தலைமையின் கீழ்தான் இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் லட்சக் கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது