வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 3 நவம்பர் 2020 (19:10 IST)

டாஸ் வென்றது ஐதராபாத்: களமிறங்குகிறார் ரோஹித்!

டாஸ் வென்றது ஐதராபாத்: களமிறங்குகிறார் ரோஹித்!
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் தகுதி பெற உள்ள நான்காவது அணியை நிர்ணயம் செய்யும் போட்டி இன்று நடைபெறுகிறது 
 
ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியான இன்றைய போட்டியில் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன. இன்றைய போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதும், தோல்வி அடைந்தால் கொல்கத்தா அணி தகுதி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த ரோஹித் சர்மா இன்று மீண்டும் மும்பை அணிக்காக களம் இறங்குகிறார். அதேபோல் இன்று முக்கிய பந்துவீச்சாளர்களான பும்ரா, டிரண்ட் போல்ட் ஆகிய இருவரும் அணியில் இல்லை
 
இந்த நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று தனது அணி முதலில் பந்து வீசும் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில போட்டிகளாக சேஸ் செய்யும் அணி வெற்றி பெற்று வருவதை அடுத்தே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது