செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (21:15 IST)

மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்.. தென்னாப்பிரிக்காவின் மார்க்கம் அபார சதம்..!

markkam
மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்.. தென்னாப்பிரிக்காவின் மார்க்கம் அபார சதம்..!
மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியின் மார்க்கம் மிக அபாரமாக விளையாடி 115 ரன்கள் எடுத்து உள்ளார். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரரான டீன் எல்கர் 71 ரன்களும், மார்க்கம் 115 ரன்களும், அடித்துள்ளனர் 
 
இன்றைய போட்டியின் இறுதியில் தென்னாப்பிரிக்க அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜோசப் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நாளை இரண்டாவது நாள் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva