வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (17:19 IST)

''என் இனிய நண்பர்'' முதல்வர் முக.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறிய ரஜினிகாந்த்

rajinikanath
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்துகள் கூறியுள்ளார்.

தமிழ் நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றன. எனவே முதல்வராக முக.ஸ்டாலின் பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், இன்று தன் 70 வது பிறந்த நாளைக் கொண்டாடி வரும் முதல்வர் முக. ஸ்டாலினுக்கு அவரது கட்சியினர், மூத்த தலைவர்கள், அரசியல் கட்சியினர், தொண்டர்கள்  என பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில்,  இன்று ஒரு வீடியோ வெளியிட்டு,  ரஜினிக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார்.

அதில், ‘’என்னுடைய இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களே நீண்ட நாள் நல்ல ஆரோகியத்துடனும், மன நிம்மதியுடனும் இருந்து மக்கள் சேவை செய்ய வேண்டுமென்று அவரது 70 வது பிறந்த நாளில் நான் மன தார வாழ்த்துகிறேன்.’’என்று தெரிவித்துள்ளார்.