வியாழன், 21 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (22:14 IST)

டீகாக் அதிரடி ஆட்டத்தால் தென்னாப்பிரிக்கா வெற்றி: தொடர் சமன் ஆனது

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்தத் தொடர் இரு தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி சமனானது
 
 
பெங்களூரில் இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. தவான் 36 ரன்களும், ரிஷப் பண்ட் 19 ரன்களும், ஜடேஜா 19 ரன்களும் எடுத்தனர்
 
இதனை அடுத்து 135 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 16.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டீகாக் அதிரடியாக விளையாடி 52 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.மேலும் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
இந்த போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் டி20 தொடர். சமனானது இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது