உலக சாதனையை தக்கவைப்பது யார் ? – கோஹ்லியா ? ரோஹித்தா ?

vinothkumar| Last Updated: ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (13:28 IST)
டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையை கைப்பற்றுவதில் கோஹ்லிக்கும் ரோஹித்துக்கும் இடையே கடுமையானப் போட்டி நிலவுகிறது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டி இன்று நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் விளையாடும் ரோஹித் ஷர்மா மற்றும் கோஹ்லிக்கு இடையே முக்கியமான சாதனைக்கான போட்டியில் உள்ளனர்.

டி20 போட்டியில் அதிகமான ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில்  89 இன்னிங்ஸ்களில் ரோஹித் சர்மா 2,434 ரன்கள் சேர்த்திருந்து முதலிடத்தில் இருந்தார். அதைக் கடந்த மொஹாலி போட்டியில்  66 இன்னிங்ஸ்களில் விராட் கோலி தற்போது 2,441 ரன்களுடன் முதலிடத்துக்கு வந்தார். இந்நிலையில் கோஹ்லிக்கும் ரோஹித்துக்கும் இடையில் முதல் இடத்தைப் பிடிப்பதில் 7 ரன்களே உள்ளது. அதனால் இன்றைய போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தபோவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :