ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (19:22 IST)

3வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங், ரோஹித் சர்மா ஏமாற்றம்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டி20 தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் மூன்றாவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது 
 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அடுத்து இந்திய தொடக்க வீரர்களான தவான் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினர். இந்த நிலையில் ரோகித் சர்மா மூன்றாவது ஓவரிலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்கள் மட்டுமே எடுத்து மைதானத்தை விட்டு வெளியேறினார்
 
தற்போது தவான் 16 ரன்களுடனும் கேப்டன் விராட் கோலி 2 ரன்களுடனும் பேட்டிங் செய்து வருகின்றனர். இன்றைய  போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும் என்பதும், தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றால் தொடர் சமமாகும் என்பதும் குறிப்பிடதக்கது. இன்றைய இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது