இன்று 3வது டி20: தொடரை கைப்பற்றுமா இந்தியா?

sivalingam| Last Modified ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (07:54 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 மழையினால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் 3வது 20ஒவர் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியில் இந்தியா வென்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்திய வீரர்கள் பூர்த்தி செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதே நேரத்தில் இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால் தொடர் சமன் ஆகிவிடும் என்பதால் தென்னாப்பிரிக்க வீரர்கள் வெற்றிக்காக தீவிர முயற்சி செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய அணியை பொருத்தவரை தவான், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், ஆகியோர் கொண்ட நீண்ட பேட்டிங் வரிசை இருக்கின்றது. அதேபோல் தீப்க் சஹார், சயினி, ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, ஆகிய விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளர்கள் உள்ளதால் அணி வலுவாக உள்ளது


தென்னாப்பிரிக்க அணியை பொருத்தவரையில் டீகாக், பவுமா, ஹெண்ட்ரிக்ஸ், வாண்டர்சன், மில்லர் ஆகிய பேட்ஸ்மேன்களும், ஷாம்சி, ரபடா, ஃபார்ட்டுன், ஆகிய பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இன்றைய போட்டி இரு அணி வீரர்களுக்கும் சவால் நிறைந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :