வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 6 பிப்ரவரி 2023 (07:51 IST)

6 பந்துகளில் 6 சிக்சர் அடித்த கிரிக்கெட் வீரர்..! யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்த வீரர் யார்?

sixer
6 பந்துகளில் 6 சிக்சர் அடித்த கிரிக்கெட் வீரர்..! யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்த வீரர் யார்?
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் 6 பந்துகளில் ஆறு சிக்ஸர் அடித்து இந்திய வீரர் யுவராஜ் சிங் செய்த சாதனையை சமன் செய்தார். 
 
தற்போது பாகிஸ்தான் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இதில் கிளாடியேட்டர் அணியை சேர்ந்த இப்திகார் அகமது என்ற வீரர் கடைசி ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்சர் அடித்து அசத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாமின் பெஷாவர் அணிக்கும் சர்பாஸ் அகமதுவின் கிளாடியேட்டர் அணிக்கும் நேற்று 20 ஓவர் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 
 
இதில் பேஷாவர் அணியை சேர்ந்த வஹாப் ரியாஸ் பந்து வீச வந்தபோது அந்த பந்தை எதிர்கொண்ட இப்திகார் அகமது என்பவர் 6 பந்துகளில் தொடர்ச்சியாக 6 சிக்சர்கள் அடித்து சாதனை செய்தார். ஆறாவது சிக்சரை அவர் அடித்து முடித்தவுடன் மைதானமே அதிர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் 6 பந்துகளில் ஆர் சிக்சர்கள் அடித்து உள்ளார் என்பதும் அந்த சாதனையை அகமது சமன் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva