ஸ்ரேயாஸ் ஐயருக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது!

Last Updated: வியாழன், 8 ஏப்ரல் 2021 (17:39 IST)
தோள்பட்டை காயத்தால் பாதிக்கப்ப்ட்ட இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

எல்லா சீசன்களிலும் கடைசி அணியாக வந்து கொண்டிருந்த டெல்லி அணி கடந்த சீசனில் இறுதிப் போட்டிவரை சென்றது. அதற்கு முக்கியக் காரணம் அந்த அணியில் புதிய இளம் வீரர்கள் புகுத்த்தப்பட்டது, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பதவியை ஏற்றதும்தான். அந்த அளவுக்கு சிறப்பாக அணியை வழிநடத்தினார் ஸ்ரேயாஸ்.

இந்நிலையில் இந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து அவர் ஐபிஎல் தொடர் முழுவதும் நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் பீல்டிங்கின் போது காயமடைந்தார். தோள்பட்டையில் எலும்பு இடம் மாறியதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதனால் அவர் சில மாதங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டியுள்ளது. ஸ்ரேயாஸின் நீக்கம் டெல்லி அணிக்கு மிகபெரும் பின்னடைவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் அணியை யார் வழிநடத்தப் போகிறார்கள் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. தனது புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயாஸ் ‘விரைவில் களத்திற்கு வருவேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.’ எனக் கூறியுள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :