ஆர்சிபி அணி ஜெர்ஸியில் உசேன் போல்ட்!

Last Updated: வியாழன், 8 ஏப்ரல் 2021 (13:40 IST)

ஆர்சிபி அணி ஜெர்ஸியை அணிந்து உசேன் போல்ட் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

நாளை ஐபிஎல் 2021 தொடங்க உள்ளது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோத உள்ளன. இதையொட்டி உலகின் அதிவேக மனிதன் எனக் கொண்டாடப்படும் உசேன் போல்ட் ஆர்சிபி அணியின் ஜெர்ஸியை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘இன்னமும் நான் வேகமான பூனையாக தான் இருக்கிறேன்’ எனக் கூற கேப்டன் கோலி அதில் ‘எங்களுக்கு தெரியும். அதனால்தான் உங்களை அணியில் இணைத்துள்ளோம்’ எனக் கூறியுள்ளார். மற்றொரு ஆர்சிபி வீரரான டிவில்லியர்ஸ் ‘கூடுதல் ரன் தேவைப்படும்போது யாரை அழைக்கவேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :