திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 16 பிப்ரவரி 2023 (12:09 IST)

இந்திய அணியில் இடம்பெறாவிட்டால்..? ஷிகர் தவான் கூறியது என்ன தெரியுமா?

Shikar Dawan
இந்திய அணியில் தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் ஒருவேளை இடம் கிடைக்க விட்டாலும் அது நல்லது தான் என்றும் ஷிகர் தவான் கூறியுள்ளார்.
 
இந்திய அணியில் தற்போது இளைஞர்கள் பலர் வாய்ப்பு பெற்று வரும் நிலையில் 37 வயதான ஷிகர் தவான் கடந்த சில போட்டிகளாக ஒதுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த அவர் ’வாழ்க்கை என்பது மேடு பள்ளங்கள் கொண்டது தான் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஒருவர் நன்றாக விளையாடினால் கூட அணியில் வாய்ப்பு கிடைப்பது என்பது கடினம் தான். 
 
நான் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவேன் என்று நம்புகிறேன், அது நடந்தால் நல்லது, ஒருவேளை நடக்காவிட்டால் அதுவும் நல்லது தான்’ என்று தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் நான் நிறைய சாதித்து விட்டேன் என்று அதனால் மகிழ்ச்சியாக உள்ளேன் என்றும் எனது அடுத்த கவனம் ஐபிஎல் போட்டிகளில் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
ஐபிஎல் பஞ்சாப் அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva