திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 10 செப்டம்பர் 2020 (17:49 IST)

வேறு அணியாக இருந்தால் என்னை தூக்கி இருப்பார்கள்… ஆனால் தோனி நம்பினார்! உருகிய சி எஸ் கே வீரர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷேன் வாட்ஸன் கடந்த ஆண்டு தனது பார்ம் குறித்து பேசியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை சி எஸ் கே அணி வென்றதற்கு சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷேன் வாட்சன் முக்கியக் காரணம். ஆனால் கடந்த ஆண்டு அவரது ஆட்டத்திறன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. வயதும் அதிகமாகிவிட்ட நிலையில் வாட்ஸன் இந்த ஆண்டு அணியில் இடம்பெறமாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டும் அவர் அணியில் இருக்கிறார். மேலும் தன் ஆட்டத்திறன் குறித்து பேசிய வாட்டோ ‘கடந்த சில ஆண்டுகளாக நான் டி 20 போட்டிகளில் விளையாடுவதும் விளையாடாமலும் இருந்து வருகிறேன். கடந்த ஆண்டு நான் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் வேறு அணியாக இருந்தால் என்னை நீக்கி இருப்பார்கள். ஆனால் தோனி என் மீது நம்பிக்கை வைத்தார்.’ எனக் கூறியுள்ளார்.