1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 20 ஜூன் 2017 (13:17 IST)

பாகிஸ்தான் ரசிகர் சீண்டல்: கோபப்பட்ட ஷமி; சமாதானம் படுத்திய தோனி!! வைரல் வீடியோ

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றால் அனைவருக்கும் தனி ஆக்ரோஷம் உணர்வுபூர்வமாக ஏற்படும். அதே வகையில் தான் சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியும் இருந்தது.


 
 
ஆனால், இந்திய அணி படு மோசமாக பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் பலரும் கொந்தளித்தனர்.
 
அதே போல் பாகிஸ்தான் ரசிகர்கள் இதை கொண்டாடினர். சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்த்திப்பிலும் பாகிஸ்தான் நிருபர் ஒருவர் கோலியின் கோபத்திற்கு ஆளானார்.
 
தற்போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் இந்திய வீரர்களை சீண்டுகிறார், அதில் ஒருவர் யாருட உனது தந்தை என அநாகரிகமாக கேள்வி எழுப்ப, கிரிக்கெட் வீரர் சமி கோபமடைந்து அந்த ரசிகரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறார். ஆனால், அவர் பின்னால் வந்த தோனி ஷமியை சமாதானம் படுத்தி அழைத்து செல்கிறார்.
 
இதோ அந்த வீடியோ...