புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2019 (22:15 IST)

தொடர்ச்சியான 7வது தோல்வி: தேறுமா தமிழ் தலைவாஸ் அணி?

புரோ கபடி போட்டியில் கடைசியாக விளையாடி 7 தோல்விகள் உள்பட மொத்தம் 8 தோல்விகளை அடைந்துள்ள தமிழ் தலைவாஸ் அணி அடுத்த சுற்றுக்கு செல்வது மிகவும் கடினம் என்பதால் தமிழக கபடி ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்
 
இன்ரு நடைபெற்ற தெலுங்கு டைட்டான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தெலுங்கு டைட்டான்ஸ் அணி 35 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் அணி 30 புள்ளிகளும் பெற்றதை அடுத்து தெலுங்கு டைட்டான்ஸ் அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் புள்ளிகள் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 10வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 
 
இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் ஹரியானா அணி, புனே அணியை வீழ்த்தியது. ஹரியானா அணி 41 புள்ளிகளும், புனே அணி 27 புள்ளிகளும் எடுத்ததை அடுத்து ஹரியானா 14 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது