தமிழ் தலைவாஸ் அணிக்கு மேலும் ஒரு தோல்வி! அடுத்த சுற்றுக்கு செல்லுமா?

Last Modified ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (21:55 IST)
புரோ கபடி போட்டியில் விளையாடி வரும் தமிழ் தலைவாஸ் அணி ஏற்கனவே மூன்று போட்டிகளில் மட்டுமே வென்றுள்ள நிலையில் இன்று நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வி அடைந்தது. இதனால் அடுத்த சுற்றுக்கு தமிழ் தலைவாஸ் அணி செல்லுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது


இன்று நடைபெற்ற தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஒரு கட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும் பெங்களூரு
அணியும் தலா 14 புள்ளிகள் எடுத்து சமநிலையில் இருந்தது. ஆனால் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் செய்த சின்ன சின்ன தவறுகளால் பெங்களூர் அணி புள்ளிகள் அதிகம் பெற்று கொண்டே வந்தது. இறுதியில் பெங்களூர் அணி 33 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணி வீரர்களால் 27 புள்ளிகள் மட்டுமே பெற முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது

முன்னதாக நடைபெற்ற மற்றொரு போட்டியில் உபி அணியும் பெங்கால் அணியும் மோதின. இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் உத்தரபிரதேச 32 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. 29 புள்ளிகள் மட்டுமே பெற்ற பெங்கால் தோல்வி அடைந்தது.


இந்த நிலையில் இன்றைய போட்டி பின்னர் டெல்லி, பெங்கால் மற்றும் ஜெய்ப்பூர் அணிகள் முதல் மூன்று இடத்திலும் பெங்களூர், ஹரியானா, மும்பை, ஆகிய அணிகள் அடுத்த மூன்று இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :