புரோ கபடி போட்டிகள்: மும்பை, குஜராத் அணிகள் வெற்றி!

Last Modified ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (08:11 IST)
புரோ கபடி போட்டிகள் ஆறாவது வாரம் முடிவடைந்து நேற்று ஏழாவது வாரம் தொடங்கியது. நேற்றைய முதல் போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடிய குஜராத் அணி 32 புள்ளிகள் எடுத்தது. பெங்களூரு அணி 23 புள்ளிகள் மட்டுமே எடுத்ததால், குஜராத் ஆகிய ஒன்பது புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இதனை அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மும்பை மற்றும் ஜெய்ப்பூர் அணிகள் மோதின. இந்த போட்டியிலும் ஆரம்பத்திலிருந்தே மும்பை அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஜெய்ப்பூர் அணி வீரர்கள் புள்ளிகள் எடுக்க தடுமாறியதால் வெறும் 21 புள்ளிகள் மட்டுமே எடுத்தனர். ஆனால் மும்பை அணி 47 புள்ளிகள் எடுத்து 26 புள்ளிகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது

நேற்றைய போட்டியின் பின்னர் டெல்லி அணி முதலிடத்திலும், பெங்கால் அணி இரண்டாவது இடத்திலும், ஜெய்ப்பூர் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. அரியானா, மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தலைவாஸ் அணி 9வது இடத்தில் உள்ளது இன்று அந்த அணி பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :