திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 10 செப்டம்பர் 2018 (11:47 IST)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி - டென்ஷனால் தோல்வியடைந்த செரினா வில்லியம்ஸ்

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நடைபெற்ற சில பிரச்சனைகளில் ஏற்பட்ட டென்ஷனால்  செரினா பட்டம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா என்ற வீராங்கனையை எதிர்கொண்டார்.
போட்டியின் போது செரினாவிற்கும் நடுவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் டென்ஷனோடு விளையாடிய செரினா 6-2, 6-4 எனும் நேர் செட்டில் நவோமியிடம் தோல்வியடைந்தார்.
இந்த வெற்றியின் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை வென்ற முதல் ஜப்பான் வீராங்கனை என்ற பெருமையை நவோமி பெற்றுள்ளார்.