வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (23:33 IST)

5வது டெஸ்ட்: இங்கிலாந்து நிதான ஆட்டம்: 198/7

லண்டனில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி முதல் நாள் இறுதியில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த போட்டியுடன் ஓய்வு பெறப்போகும் குக் 71 ரன்களும், எம்.எம்.அலி 50 ரன்களும் எடுத்துள்ளனர். இந்தியா தரப்பில் இஷாந்த் சர்மா 3விக்கெட்டுக்களையும் பும்ரா மற்றூம் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரூட் மற்றும் பெயர்ஸ்டோ ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக இருந்தாலும் பட்லர் மற்றும் ரஷித் நிதானமான ஆட்டத்தை வெளிபப்டுத்தி ஆட்டமிழக்காமல் விளையாடி வருகின்றனர்.