செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 8 செப்டம்பர் 2018 (18:25 IST)

இங்கிலாந்து அணியை மீட்ட பட்லர், பிராட்

5வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிராட், பட்லர் இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

 
இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி நேற்றை முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்து இருந்தது.
 
இதனால் இன்றைய நாள் ஆட்டத்தில் விரைவில் இங்கிலாந்து அணி ஆல் அவுட்டாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 8 விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பட்லர், பிராட் இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்க்கொண்டு வருகின்றனர்.
 
இந்த ஜோடியில் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து 300 ரன்கள் கடந்தது. இந்த ஜோடியின் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.