வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (17:05 IST)

என்னடா இது கோலிக்கு வந்த சோதனை... டாஸ் கூட ஜெயிக்க முடியல

இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையேயான 5 வது டெஸ்ட் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கியுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 1-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.
 
இதனால், இந்திய அணி வீரர்கள் தேர்வையும், கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியையும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில், இன்று போட்டி துவங்குவதற்கு முன்னர் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. 
 
இதுவரை நடந்த 5 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி கேப்டன் கோலி ஒரு முறை கூட டாஸ் வெல்லவில்லை. இது குறித்து கோலியிடம் கேட்ட போது நான் ஹெட் என கூறினால், அது டாஸில் வர வேண்டும் என்றால் நாணயத்தின் இரு பக்கங்களும் ஹெட்டாக இருக்க வேண்டும் என பரிதாபமாக பதிலளித்துள்ளார். 
 
தற்போது விளையாடி வரும் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவுகளில் 56 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் ஏனும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக அளவில் உள்ளது.