1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 28 ஜூன் 2023 (08:00 IST)

உலகக் கோப்பை அட்டவணையில் இதைக் கவனிச்சீங்களா… கோலிக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்குமா இந்திய அணி?

13 ஆவது 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. முதல் முறையாக தொடர் முழுவதும் இந்தியாவில் மட்டுமே நடக்க உள்ளது. இதற்கான அட்டவணை நேற்று மும்பையில் நடந்த ஒரு நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி தங்கள் முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சென்னையில் அக்டோபர் 8 ஆம் தேதி விளையாடுகிறது. மற்றொரு முக்கிய அணியான தென் ஆப்பிரிக்க அணியோடு நவம்பர் 5 ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் விளையாடுகிறது.

அன்று விராட் கோலியின் 35 ஆவது பிறந்தநாளாகும். கோலியின் பிறந்தநாளில் நடக்கும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று அவருக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.