திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 27 ஜூலை 2021 (08:14 IST)

இன்று 2வது டி20 போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அந்த தொடரில் 2-1 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை வென்றது என்பது தெரிந்ததே
 
அதன் பின்னர் தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால் டி20 தொடரையும் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் இந்தியா அணியில் முதல் டி20 போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் விளையாடவுள்ளதாக கூறப்படும் நிலையில் இன்றைய போட்டியி இந்தியா வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்