1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona daily cases drop down under 50 thousand

இந்திய கொரோனா: 24 மணி நேரத்தில் 35,968 டிஸ்சார்ஜ்: 416 பேர் பலி

India
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்திருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,14,11,262 ஆக உயர்ந்தது.மேலும், புதிதாக 416 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,20,967 ஆக உயர்ந்தது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 35,968 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,05,79,106 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,11,189 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 43,51,96,001 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
கார்கில் வெற்றி தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு!