செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (08:46 IST)

மோடி தலைமையிலான இந்தியாவின் போர்! – பிரதமர் பற்றிய புத்தகம் வெளியீடு!

கொரோனா காலத்தில் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்த புத்தகம் இன்று வெளியாகிறது.

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் மார்ச் மாதம் தேசிய அளவிலான முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது. மே வரை தொடர்ந்த இந்த பொது முடக்கத்தால் மக்கள் பொருளாதாரரீதியாக பாதிப்படைந்தனர். எனினும் கொரோனா தாக்கம் குறைந்தது.

இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்கள் கொரோனா மற்றும் பொது முடக்கத்தை எதிர்கொண்ட விதம் குறித்து ”எ நேஷன் டு ப்ரொடெக்ட்” (ஒரு தேசத்தின் பாதுகாப்பு) என்ற புத்தகத்தை ப்ரியம் காந்தி மோடி எழுதியுள்ளார். ப்ரியம் காந்தியின் மூன்றாவது புத்தகம் இது.

இதில் கடந்த 2 ஆண்டுகளில் கொரோனாவை அரசு மற்றும் மக்கள் கையாண்ட விதம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த புத்தகத்தை இன்று மதியம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா வெளியிடுகிறார்.