திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Updated : சனி, 25 செப்டம்பர் 2021 (18:07 IST)

ஐபிஎல் போட்டிகளில் குறுக்கிடும் புழுதிப்புயல்!

ஐபிஎல் தொடரில் நேற்று இன்றும் போட்டிகளுக்கு முன்னர் புழுதிப் புயல் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இருந்த ஐபிஎல் 2021 சீசன் கொரொனா இரண்டாம் அலையின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடக்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்றும் இன்றும் மைதானங்களில் புழுதிப் புயல் அடித்தது. நேற்று இதனால் 10 நிமிடத்துக்கு மேல் தாமதமாக போட்டி தொடங்கியது. இந்நிலையில் இன்று வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட போதும் அதுபோல புழுதிப் புயல் அடித்தது.