முதல்வருக்கு மனு கொடுக்க வெள்ளைத்தாள் போதும்… தமிழக அரசு அறிவிப்பு!
தமிழக மக்கள் முதல்வரிடம் ஏதேனும் மனுக் கொடுக்க வேண்டும் என்றால் வெள்ளைத் தாளில் கொடுத்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் மனு அளிக்கவும் எழுதவும் என்றே வெளியே பலர் இருப்பார்கள். அவர்களுக்காகவே நாம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டி இருக்கும். இந்நிலையில் இப்போது முதல்வரிடம் மக்கள் மனு கொடுக்க வேண்டும் என்றால் வெறும் வெள்ளைத்தாளில் எழுதி கொடுத்தால் போதும். ஏதும் படிவங்கள் வாங்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் புகார் அளிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.