1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Samson’s Masterclass Seals Dramatic Win for India

மே.இ.தீவுகளை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா.. சஞ்சு சாம்சன் பேட்டிங் அபாரம்..!

கிரிக்கெட்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பரபரப்பான டி20 போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 
முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, ரோவ்மன் பவல் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
196 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு, தொடக்க வீரர்கள் ஏமாற்றம் அளித்தாலும், சஞ்சு சாம்சன் நங்கூரம் போன்று நிலைத்து நின்று ஆடினார். வெறும் 50 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 97 ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 
 
திலக் வர்மா 27 ரன்கள் எடுத்து சஞ்சுவுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இறுதியில் 19.2 ஓவர்களில் இந்தியா 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார். அவரது இந்த அதிரடி ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு ரூ.16.28 அபராதம்.. அதிர்ச்சியில் வீரர்கள்..!