புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (12:03 IST)

சித்தார்த் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி: சாய்னா நேவால்

என்னை பற்றி ட்விட்டரில் விமர்சித்த நடிகர் சித்தார்த் மன்னிப்பு கேட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று சாய்னா தெரிவித்திருக்கிறார். 

 
பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்த நடிகர் சித்தார்த் தற்போது அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இடம் மன்னிப்பு கேட்ட சித்தார்த் டுவீட்டில் பதிவு செய்தது சரியாக புரிந்து கொள்ளப்படாமல் எனது நகைச்சுவைக்கு மன்னிப்பு கோருகிறேன் என்றும் எனது டுவீட்டில் உள்ள வார்த்தைகள் நகைச்சுவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்றும் உள்நோக்கம் கொண்டது அல்ல என்றும் நீங்கள் எப்போதும் என்னுடைய சாம்பியன் ஆகவே இருப்பீர்கள் என்றும் சித்தார்த் குறிப்பிட்டுள்ளார். 
 
பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு குறித்து சாய்னா நேவல் பதிவு செய்த டுவிட்டுக்கு சர்ச்சைக்குரிய வகையில் சித்தார்த் பதிவு செய்ததற்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது அவர் மன்னிப்பு கேட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் என்னை பற்றி ட்விட்டரில் விமர்சித்த நடிகர் சித்தார்த் மன்னிப்பு கேட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று சாய்னா தெரிவித்திருக்கிறார். பெண்களை இதுபோன்று வசைபாடக் கூடாது; ஆனால் அதை பற்றி எனக்கு கவலையில்லை. சித்தார்த் கூறியது ஏன் வைரலானது என எனக்கே தெரியவில்லை; அதை கண்டு ஆச்சர்யமடைந்தேன் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.