செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (18:21 IST)

நடிகர் சித்தார்த்துக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

நடிகர் சித்தார்த்துக்கு  தேசிய மகளிர் ஆணையம்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி சமீபத்தில் பஞ்சாப் சென்றது குறித்தும் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது குறித்தும் டுவிட் பதிவு செய்தார். இந்த ட்விட்டிற்கு சித்தார்த் பதிவு செய்த கமெண்ட்டுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பேட்மிண்டன் வீராங்கனையை விமர்சித்த நடிகர் சித்தார்த்துக்கு  தேசிய மகளிர் ஆணைய  நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.