செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 11 ஜனவரி 2022 (13:01 IST)

சித்தார்த்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்: சாய்னா நேவால் பேட்டி!

நடிகை சித்தார்த்தை எனக்கு ஒரு நடிகராக ரொம்ப பிடிக்கும் என்றும் ஆனால் அவர் இந்த விஷயத்தில் நல்ல வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கலாம் என்றும் சாய்னா நேவல் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பிரதமரின் பாதுகாப்பு குறித்து டுவிட்டரில் பதிவு செய்த நிலையில் அந்த பதிவிற்கு சர்ச்சைக்குரிய வகையில் சித்தார்த் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து சித்தார்த்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன என்பதும் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் டிஜிபியிடம் மனு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சாய்னா நேவால் சித்தார்த் எதைப் பற்றி பேசினார் எனக்கு சரியாக புரியவில்லை, ஆனாலும் எனக்கு அவரை ஒரு நடிகராக ரொம்ப பிடிக்கும். இருப்பினும் அவர் அப்படி செய்திருக்கக் கூடாது. விமர்சனம் செய்வதற்கு எவ்வளவு நல்ல வார்த்தைகள் உள்ளன, அதன் மூலம் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறினார். சாய்னா நேவாலின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.