செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 24 ஜூன் 2021 (08:45 IST)

மிதாலி ராஜின் பயோபிக்கில் டாப்ஸி… திடீரென இயக்குனர் விலகல்!

முன்னாள் இந்தியபெண்கள் கிரிக்கெட்டின் கேப்டன் மிதாலி ராஜினி பயோபிக்கான சபாஷ் மிது உருவாகி வருகிறது.

இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் அடையாளமாகத் திகழ்பவர் மிதாலி ராஜ். கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 20 ஆண்டுகளை அவர் கடந்துள்ளார். இந்நிலையில் இப்போது சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இந்நிலையில் சமீபகாலமாக விளையாட்டு வீரர்களின் பயோபிக்குகள் அதிகமாக பாலிவுட்டில் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் இவரின் பயோபிக்கான சபாஷ் மிது படத்தின் அறிவிப்பும் வெளியானது.

இந்த படத்தில் மிதாலி ராஜாக டாப்ஸி நடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது. வயாகாம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தை ராகுல் தோலக்கியா இயக்கி வந்தார். இந்நிலையில் திடீரென இப்போது அந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.