செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 23 ஜூன் 2021 (12:09 IST)

மாஸ்டர்'ஐ முந்திய ‘பீஸ்ட்’: இந்திய அளவில் அதிக லைக்ஸ்கள் பெற்று சாதனை!

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வெளியான நிலையில் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்தியாவிலேயே குறைந்த நேரத்தில் மிக அதிக லைக்ஸ்கள் பெற்ற சாதனையை ஏற்படுத்தி உள்ளது
 
ஏற்கனவே இதுபோன்ற ஒரு சாதனையை விஜய்யின் மாஸ்டர் படம் பெற்றதை அடுத்து அந்த சாதனையை தற்போது ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முந்தியது என்பது குறிப்பிடத்தக்கது 
விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி 21 மணி நேரத்தில் 2.7 இலட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பதும் இந்தியாவிலேயே ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டர் டுவீட்டுக்கு அதிக லைக்ஸ்கள் குறைந்த மணி நேரத்தில் கிடைத்தது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது 
 
பொதுவாக விஜய்யின் சாதனையை அவரே தான் இதுவரை முறியடித்துள்ளார் என்றும் வேறு நடிகர்கள் முறியடிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தின் சாதனையை அவரே மீண்டும் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.