செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 26 பிப்ரவரி 2022 (08:13 IST)

இலங்கை தொடருக்கு எதிராக ருத்ராஜ் விலகல்: அணியில் இணைந்த வீரர் யார் தெரியுமா?

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் முதல் போட்டியில் காயம் காரணமாக விலகியிருந்த ருத்ராஜ் இந்த தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். காயம் இன்னும் சரியாகவில்லை என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்
 
இந்த நிலையில் அவருக்கு பதிலாக அணியில் மயங்க் அகர்வால் இணைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மயங்க் அகர்வால் நல்ல பார்மில் இருக்கும் நிலையில் அவர் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் தனது திறமையை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.