1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (23:54 IST)

ஹங்கேரி, ருமேனியாவில் தஞ்சம் அடைந்தவர்களை மீட்க தனி விமானங்களை அனுப்பும் ஏர் இந்தியா

யுக்ரேனில் இருந்து வெளியேறி ஹங்கேரி, ருமேனியாவில் தஞ்சம் அடைந்தவர்களை மீட்க தனி விமானங்களை அனுப்பும் ஏர் இந்தியா
 
யுக்ரேன் எல்லையில் இருந்து வெளியேறி ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வர டெல்லி மற்றும் மும்பையில் இருந்து தனி விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
 
இது தொடர்பான தகவலை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், ஹங்கேரியின் புடாபெஸ்ட், ருமேனியாவின் புகாரெஸ்ட் ஆகிய இடங்களுக்கு இந்த விமானங்கள் அனுப்பப்பட்டு அங்குள்ள இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.