வெள்ளி, 31 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated: திங்கள், 28 நவம்பர் 2022 (14:38 IST)

ஒரே ஓவரில் ஏழு சிக்சர்கள்.. சிஎஸ்கே வீரர் ருத்ராஜ் சாதனை!

ruthraj
நோபால் உள்பட ஒரே ஓவரில் வீசப்பட்ட 7 பந்துகளில் சிக்சர் அடித்து ருத்ராஜ் கெய்க்வாட் சாதனை செய்துள்ளார். 
 
தற்போது விஜய் ஹசாரே தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் காலிறுதிப் போட்டி உத்திரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா அணிகளுக்கிடையே நடைபெற்றது.
 
 இந்த போட்டியில் மகாராஷ்டிரா அணி வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் மிக அபாரமாக விளையாடினார். அவர் ஒரு ஓவரில் 5 பந்துகளில் சிக்சர் அடித்த நிலையில் 6-வது பந்து நோபாலாக அமைய அந்த பந்திலும் சிக்ஸர் அடித்து, அதற்கு அடுத்த பந்திலும் சிக்சர் அடித்து ஒரு ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து புதிய சாதனை செய்துள்ளார்
 
ஒரே ஓவரில் நோ பால் உள்ளிட்ட அனைத்து பந்துகளில் சிக்சர் அடித்து சாதனை ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு  பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ருத்ராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள முக்கிய வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva