வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 25 மே 2022 (08:33 IST)

ஹாட்ரிக் சிக்சர்களுடன் வெற்றியை பதிவு செய்த டேவிட் மில்லர்!

ஹாட்ரிக் சிக்சர்களுடன் வெற்றியை பதிவு செய்த டேவிட் மில்லர்!
david miller
நேற்று நடைபெற்ற முதல் பிளே ஆப் போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது என்பதும் அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் குஜராத் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் ஹாட்ரிக் சிக்சர்களுடன் போட்டியை வெற்றிகரமாக முடித்துள்ளார் 
கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை  என்ற நிலையில் ராஜஸ்தான் அணியின் பிரசித் கிருஷ்ணா அந்த ஓவரை வீசினார் 
 
பிரசித் கிருஷ்ணாவின் ஓவரில் முதல் 3 பந்துகளில் 3 சிக்சர்கள் அடித்து டேவிட் மில்லர் வெற்றியை பெற்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது