வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (10:08 IST)

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய ஏ அணியில் ருத்ராஜ், குல்தீப் யாதவ்!

indian a
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய ஏ அணியில் ருத்ராஜ், குல்தீப் யாதவ்!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று 4 நாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது
 
 இந்திய அணியின் கேப்டனாக பிரியங்க் பஞ்சால் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் போட்டியும், செப்டம்பர் 8ஆம் தேதி இரண்டாவது போட்டியும் மூன்றாவது மற்றும் இறுதி போட்டி செப்டம்பர் 15ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த மூன்று ஆட்டங்களும் பெங்களூரில் நடைபெறுகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய ஏ அணியின் உள்ள வீரர்கள் பின்வருமாறு:  பிரியங்க் பஞ்சால் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், திலக் வர்மா, கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர் ), உபேந்திர யாதவ் (விக்கெட் கீப்பர் ), குல்தீப் யாதவ், சவுரப் குமார், ராகுல் சாஹர், பிரசித் கிருஷ்ணா, உம்ரான் மாலிக், முகேஷ் குமார், யாஷ் தயாள், அர்சான் நாக்வாஸ்வல்லா.