டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்க உள்ளது.
இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் தோல்வி அடைந்தது. தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை அணிக்கு அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி தடை போட்டது.
இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னை அணி விளையாடுவதால் ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியிலும் சென்னை அணியின் வெற்றியை காண ஆர்வமாக உள்ளனர்.