திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2022 (10:54 IST)

மொபைலை தட்டிவிட்ட ரொனால்டோ! விளையாட தடை விதித்ததால் அதிர்ச்சி!

Ronaldo
ரசிகரின் மொபைல் போனை தட்டிவிட்ட விவகாரத்தில் ரொனால்டோ விளையாட தடை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போது நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

க்ளப் அணிகளில் மான்செஸ்டர் யுனிடெட் அணிக்காக விளையாடி வந்த ரொனால்டோ அந்த அணியின் மேனேஜருடன் ஏற்பட்ட முரண்பாட்டால் அணியிலிருந்து விலகினார். இப்போது ரொனால்டோவுக்கு புதிய பிரச்சினை வந்திருக்கிறது.


கடந்த ஏப்ரல் மாதத்தில் ஈரோ கால்பந்து க்ளப் போட்டிகளின்போது ரசிகர் ஒருவரின் மொபைலை ரொனால்டோ தட்டிவிட்டது சர்ச்சைக்குள்ளாது. அந்த சம்பவம் மீதான ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில் தற்போது ரொனால்டோவுக்கு ரூ.50 லட்சம் அபராதமும், 2 கிளப் ஆட்டங்களில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் மான்செஸ்டர் அணியிலிருந்து விலகியுள்ள நிலையில் அடுத்து எந்த அணியில் சேர்கிறாரோ அந்த அணியின் முதல் இரண்டு ஆட்டங்களில் ஆட மாட்டார் என கூறப்படுகிறது.

Edit By Prasanth.K