திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (11:14 IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி விட்டுச் சென்ற இடத்தை தக்கவைக்க வேண்டும்… ரோஹித் ஷர்மா!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்கிறார் ரோஹித் ஷர்மா. அவர் தலைமையில் இன்று இந்திய அணி இலங்கையை எதிர்த்து விளையாடுகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகியதை அடுத்து இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் முதல் போட்டியில் இன்று இந்தியா இலங்கையை எதிர்த்து விளையாடுகிறது. இது கோலியின் 100 ஆவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரோஹித் ஷர்மா டெஸ்ட் போட்டிகளை தலைமை தாங்குவது குறித்து பேசியுள்ளார். அதில் ‘எந்த வகையான போட்டியாக இருந்தாலும் சரி, நான் அதிகமாக நிகழ்காலத்துக்காக யோசிக்கவே விரும்புகிறேன். எதிர்காலத்துக்காக மிக அதிகமாக யோசிப்பதில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக கோலி செய்திருப்பது மிகவும் சிறப்பானது. நாங்கள் செய்ய வேண்டியது அவர் விட்டு சென்ற இடத்தை தக்கவைப்பதுதான்’ எனக் கூறியுள்ளார்.