செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 3 ஜூலை 2021 (15:23 IST)

சொகுசு பங்களாவை நஷ்ட விலைக்கு விற்ற ரோஹித் ஷர்மா!

இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா தனது சொகுசு பங்களாவை விற்றுள்ளார்.

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி 20 கிரிக்கெட்டின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா மும்பையில் வசித்து வருகிறார். மும்பையில் அவரது குடும்பத்தினருக்கு சொகுசு பங்களா இருக்கும் நிலையில் மகாராஷ்டிராவின் லூனாவாலா என்ற மலைவாசஸ்தலத்தில் மிகப்பெரிய விடுமுறைக்கால பங்களா ஒன்றை வாங்கியிருந்தார். 2016 ல் சுமார் 6 கோடிக்கு வாங்கிய இந்த பங்களாவை 5 ஆண்டு கழித்து 75 லட்ச ரூபாய் கம்மியாக சுமார் 5.25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.