வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 3 ஜூலை 2021 (15:22 IST)

திடீர் மருத்துவமனை விசிட் அடித்த முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று மருத்துவ சோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்று 50 நாட்களைக் கடந்துள்ளார் முக ஸ்டாலின். இந்நிலையில் இன்று காலை அவர் திடீரென்று சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ளார். வழக்கமாக அவர் மருத்துவப் பரிசோதனைக்கு இங்கிலாந்துதான் சென்று வருவார். ஆனால் இப்போது கொரோனா பரவலால் வெளிநாடுகளுக்கு செல்வதில் சிக்கல் எழுந்துள்ளதால் சென்னையிலேயே மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘இன்று (ஜூலை 3) காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வழக்கமான அரையாண்டுக்கு ஒருமுறை செய்துகொள்ளும் மெடிக்கல் செக்கப் செய்துகொள்வதற்காக மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கான மருத்துவ பரிசோதனைகள் முடிவுற்றதும் உடனடியாக அவர் மருத்துவமனையை விட்டுப் புறப்பட்டார்’ எனக் கூறியுள்ளார்.