நாங்கள் இந்தியில்தான் பேசுவோம் – ரசிகர்களை அவமதித்த ரோஹித் ஷர்மா !

Last Modified வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (15:56 IST)

கிரிக்கெட் வீரர்களான ரோஹித் ஷர்மாவும் பூம்ராவும் டிவிட்டரில் இந்தியில் பேசிக் கொண்டது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கிரிக்க்ர்ட் வீரர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் வேகப் பந்து வீச்சாளருமான பூம்ராவும் டிவிட்டரில் இந்தியில் பேசிக்கொண்டனர். இது சம்மந்தமாக ரசிகர்கள் அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசிக்கொள்ளுமாறு கேட்க, அதற்கு ரோஹித் ஷர்மா, நாங்கள் இந்தியர்கள் அதனால் இந்தியில்தான் பேசுவோம் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து இந்தி பேசாத ரசிகர்களின் மனதைக் காயப்படுத்தும் விதமாக அவர்கள் நடந்துகொண்டதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :